திருமண வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -சரவணன், பெரியகுளம்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்க ளுக்கு களத்திர காரகன் சுக்கி ரன் 7-ல் அமையப் பெற்று குரு பார்வை யுடன் இருப்பது நல்ல அமைப்பு என்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருந்தாலும் சுக்கிரன்- சனி சேர்க்கைப்பெற்று இருப்ப தால் வாழ்க்கையில் விட்டுகொடுத்து செல்ல வேண்டிய நேரமாகும். உங்கள் ஜாதகத்தில் சூரியன்- ராகு சேர்க்கைபெற்று தற்போது சூரிய தசை நடப்பதால் சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவதுமூலமாக அனுகூலங் கள் கிடைக்கும்.

ss

Advertisment

எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது தனியார் துறை வேலை தானா? எலும்பு தொடர்பான நோய் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -மலர்விழி, திருச்சி.

அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதியான சூரியன் 8-ல் மறைந்திருக்கும்பொழுது பிறந்துள்ளீர்கள். 10-ஆம் அதிபதி சூரியன் என்றாலே அரசாங்க வேலை என்று கிடையாது. உங்களுக்கு தற்போது 12-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் அமையப்பெற்று சுக்கிர தசை நடப்பதால் பிறந்த ஊரை விட வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள்மூலமாக நல்ல பணி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்புடைய வேலைகளில் முயற்சித்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ஜாதகத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் எலும்பு சம்பந்தப்பட்ட உடல் பிரச்சினைகள் இருக்கிறது. சத்தான உணவுகள் சாப்பிடுவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

என் மனைவி சில வருடங்களுக்குமுன் இறந்து விட்டார். என் தாயார் என்னை மறுமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார். எனக்கு மறுமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படி செய்துகொண்டால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -கார்த்திகேயன், சென்னை.

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 4-ல் குரு சாரம் பெற்று பலமாக இருப்பதும், சுக்கிரன் 5-ல் இருப்பதும் மணவாழ்க்கை ரீதியாக பலமான அமைப்பு என்றாலும் உங்கள் ஜாதகத்தில் 2-ல் சனி இருப்பதும், 7-ல் கேது இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். தற்போது கேது புக்தி நடப்ப தால் இந்த ஆண்டு இறுதி வரை நல்லது நடக்க வாய்ப்பு இல்லை. உங்க ளுக்கு வசதி வாய்ப்புகள், ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் சுக்கிரன், புதன் பலமாக இருப்பதால் 6-12-2025 முதல் புதன் தசையில் சுக்கிர புத்தி நடக்கும் சமயத்தில் நம்பிக்கைக்குரிய நபரை வாழ்க்கைத் துணை யாக ஏற்றுக் கொள்வதில் தப்பில்லை.

கடன் பிரச்சினை எப்பொழுது தீரும்? சொந்த வீடு எப்பொழுது அமையும்? -முத்தம்மா, திண்டுக்கல்.

சித்திர நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சனி நீசம் பெற்று இருக்கின்றபொழுது பிறந்து உள்ளீர்கள். 4-ல் சனி நீசம் பெற்று தற்போது சனி தசை நடப்பதால் கடன் பிரச்சினைகள் உள்ளது. சனி நீசம்பெற்று செவ்வாய் சேர்க்கைபெற்று இருப்பது அவ்வளவு சிறப்பு அல்ல. சனி தசை முடியும் தருவாயில் அதாவது 2026 தொடக்கத்தில் சிறிதளவு கடன்கள் குறைய வாய்ப்பு உண்டு. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் ஜாதகத்தில் அடுத்து 6-ஆம் அதிபதியான புதன் தசை 21-2-2026 முதல் நடைபெற இருப்பதால் மேலும் கடன் கள் வாங்காமல் இருப்பது நல்லது. சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் சொத்துகள் வாங்குவது என்றால் உங்கள் பெயரில் வாங்காமல் கூட்டாக வாங்கினால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். 2026-ல் சொந்த வீடு அமைவதற் கான வாய்ப்புகள் ஏற்படும்.

எனக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள்? -சுமன், விழுப்புரம்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி 9-ல் நீசம்பெற்று நீசபங்க ராஜயோகம் பெற்று வக்ரகதியில் இருக்கிறார். 7-ஆம் அதிபதி நீசம் பெற்றிருப்ப தாலும் வக்ரகதியில் இருப்பதாலும் திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் தடைக்குப்பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கு தற்போது சந்திர தசையில் செவ்வாய் புத்தி நடக்கிறது. 2026 தொடக்கத்தில் சொந்தமில்லா மல் அந்நியத்தில் திருமணத்துக் காக முயற்சித் தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சனி- சந்திரன் சேர்க்கை பெற்று புனர்பூ தோஷம் இருப்ப தால் திருமண விஷயங்களில் ஒருசில தடைக்குபிறகுதான் நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு.